ஹோம் /ராமநாதபுரம் /

“ஆதார் அட்டைகளை பரமக்குடி நகராட்சியிடம் ஒப்படைப்போம்..” ராமநாதபுரத்தில் கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..

“ஆதார் அட்டைகளை பரமக்குடி நகராட்சியிடம் ஒப்படைப்போம்..” ராமநாதபுரத்தில் கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..

X
ஆர்ப்பாட்டத்தில்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Ramanathapuram District News : பரமக்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அடிப்படை வசதி செய்து தரக்கோரி 9வது வார்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தின் கதவை மூடி முற்றுகை, ஆதார் அட்டையை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கோஷம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இதில் 9வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளான, குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி முறையாக இல்லாதததை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் திருமாள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறும், கலைந்து போக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் முறையான பேச்சு வார்த்தை நடத்தாமல் இந்த இடத்தை விட்டு விலக மாட்டோம், என்று கூறி அவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, தங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி தரும் வரை, தங்களுடைய ஆதார் அட்டையை நகராட்சி நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்து விடுவோம் எனக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

இதையும் படிங்க : பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபத்திலிருந்து புறப்படும் ரயில்கள்

இதனைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே செல்லும் முன் வாசல் கதவை பூட்டி விட்டு, யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை, அங்கு வந்த காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram