முகப்பு /ராமநாதபுரம் /

“நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” - ஆய்வுக்கு சென்ற டிஐஜியிடம் வடமாநிலத் தொழிலாளர்கள் கருத்து..!

“நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” - ஆய்வுக்கு சென்ற டிஐஜியிடம் வடமாநிலத் தொழிலாளர்கள் கருத்து..!

X
நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்

'நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' - டிஐஜி ஆய்வின் போது செங்கல் சூளையில் பணிபுரி

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை, ராமநாதபுரம் சரக டிஐஜி துரை ஆய்வு செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் வட மாநில தொழிலாளர்கள்  பணிபுரியும் செங்கல் சூளைகளில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை நேரடியாக சென்று களஆய்வு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வதந்தி காரணமாக, வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் பணிபுரியும், வசிக்கும் இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை ராமநாதபுரம் சரக டிஐஜி துரை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர் .

அத்துடன், வட மாநிலத்தவர்கள் பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா, பணிகள் எவ்வாறு உள்ளன, உணவுகள் சரியாக கிடைக்கிறதா என்பது குறித்து நேரடியாக கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க; H3N2 வைரஸ் யாரை அதிகம் பாதிக்கும்..? காய்ச்சல் பரவல் எப்போது குறையும்..? மத்திய அரசு வெளியிட்ட தகவல்..!

அப்போது, காவல்துறை அதிகாரிகளிடம், "நாங்கள் மகிழ்ச்சியாக எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் இருக்கிறோம்" என்றும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கே தெரிகிறது என்றும் தொழிலாளர்கள் அப்போது கூறினர்.

First published:

Tags: Migrant Workers