முகப்பு /ராமநாதபுரம் /

நியூஸ் 18 செய்தி எதிரொலி.. ராமேஸ்வரம் கோவிலின் 4 ரத வீதிகளிலும் வெப்பத்தை தணிக்க தண்ணீர் தெளிப்பு! 

நியூஸ் 18 செய்தி எதிரொலி.. ராமேஸ்வரம் கோவிலின் 4 ரத வீதிகளிலும் வெப்பத்தை தணிக்க தண்ணீர் தெளிப்பு! 

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோவிலின் 4 ரத வீதிகளிலும் வெப்பத்தை தணிக்க தண்ணீர் தெளிப்பு

Ramanathapuram News : நியூஸ்18 செய்தி எதிரொலியாக வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் அடையாமல் இருக்க தினந்தோறும் நகராட்சி மூலமாக சாலையில் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Ramanathapuram, India

நியூஸ்18 செய்தி எதிரொலி வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் அடையாமல் இருக்க தினந்தோறும் நகராட்சி மூலமாக சாலையில் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்றது. புனித ஸ்தலமாக விளங்குகிவரும் இங்கே, தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், பங்குனி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலையில் சூடு தாங்க முடியாமல் ஓடுகின்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து நியூஸ்18, பக்தர்கள் சிரமம் அடைவது குறித்து செய்தி வெளியிட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், ராமநாதசுவாமி திருக்கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் வெயிலின் சூட்டை தணிக்க ராமேஸ்வரம் நகராட்சி மூலமாக தண்ணீர் வண்டி மூலமாக சாலை முழுவதும் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன.  இதற்கிடையில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நடைபாதைகளில் நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க இருக்கதாகவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌

    First published:

    Tags: Local News, Ramanathapuram