முகப்பு /ராமநாதபுரம் /

காத்திருப்பு இருக்கைகள் விவகாரம் : ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு எதிரான முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

காத்திருப்பு இருக்கைகள் விவகாரம் : ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு எதிரான முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

X
முற்றுகைப்

முற்றுகைப் போராட்டம்

பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் யாத்திரை பணியாளர்கள் மற்றும் புரோகிதர்கள் மூலமாக பக்தர்களுக்கு பால், கங்கை வைத்து சிவபூஜை செய்யப்படும்‌.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதசுவாமி திருக்கோவிலில் பாரம்பரியமாக சிவபூஜை நடைபெற்ற இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் காத்திருப்பு இருக்கைகள் அமைக்க முயன்றதால், அனைத்து கட்சி பிரதிநிதிகள், யாத்திரை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலானது உலக பிரசித்தி பெற்ற முக்கிய தளங்களில் ஒன்று என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடவும், மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, சுவாமி தரிசனம் செய்யவும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பாரம்பரியமாக, தலைமுறை தலைமுறையாக கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் யாத்திரை பணியாளர்கள் மற்றும் புரோகிதர்கள் மூலமாக பக்தர்களுக்கு பால், கங்கை வைத்து சிவபூஜை செய்யப்படும்‌.

இந்த இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வரிசையில் நின்று அமர்ந்து தரிசனம் செய்ய காத்திருப்பு இருக்கைகள் அமைக்கப்போவதாக கூறியதால், அங்கு தொழில்புரிந்து வாழ்வாதாரம் பெற்று வரும் யாத்திரை பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், கோவில் துணை ஆணையாளரை கண்டித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் யாத்திரை பணியாளர்கள் முற்றுகை செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் நகர்மன்ற தலைவர் பேச்சுவார்த்தை அடுத்து தற்காலிகமாக அதன் அருகில் மாற்று இடம் அமைத்து தருவதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கோவிலுக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

    First published:

    Tags: Local News, Ramanathapuram