முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தின் 27வது ஆட்சியராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்பு..

ராமநாதபுரம் மாவட்டத்தின் 27வது ஆட்சியராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்பு..

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன்

Ramanathapuram Collector Vishnu Chandiran : ராமநாதபுரம் மாவட்டத்தின் 27வது ஆட்சியராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பணிமாற்றம் காரணமாக விடைபெற்று சென்ற நிலையில் மாவட்டத்தின் 27-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன்

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்படுவது வழக்கம், இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டு தலைமை செயலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, இதற்கு முன்‌ ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கடந்த சில மாதங்களாக இருந்த ஜானிடாம் இன்று குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைவரும் நன்றி தெரிவித்து பணிமாற்றம் காரணத்தால் விடைபெற்று சென்றார். இதனைத் தொடர்ந்து, புதிய மாவட்ட ஆட்சியராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷ்ணு சந்திரன் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவர் ராமநாதபுரத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட 27-வது மாவட்ட ஆட்சியர் ஆகும். கடந்த இரு வருடங்களுக்குள் நான்கு முறை மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram