Home /ramanathapuram /

ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு..

ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - 500 இடங்களில் விநாயகர் சிலைகள்

Vinayakar Statues in Ramanathapuram : விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 சிலைகள் வைக்கப்பட உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில்   500 இடங்களில் விநாயகர் சிலைகள்  சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களுள் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி உள்ளது, ஆண்டுதோறும் ஆவணி மாதம் சதுர்த்தி நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வருடம்தோறும் நடைபெறும் கலாச்சார  விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள தாயுமானவர் கோவிலில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளானது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தேங்காய் நார், காகித கூழ், கிழங்கு மாவு சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது.

500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு


விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் போது கடல் மற்றும் கண்மாய்களில் உள்ள மீன்களுக்கும் உணவாகும் வகையில் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு


ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தாரை 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. அவை ஓவ்வொரு பிரிவாக அந்த அந்தப் பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட ராமேஸ்வரம் பகுதி வரையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் ராமநாதபுரம், வாளாந்தரவை, உச்சிப்புளி, மண்டபம், பாம்பன், அக்காள்மடம் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் வரையிலும் முறையாக காவல்துறை அனுமதி பெற்று வைக்கப்படுகிறது.

500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

3 அடிமுதல் 9 அடி வரையிலும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. காவல்துறையினர் சிலைகளின் எண்ணிக்கை, உயரம், எடை ஆகியவற்றை சோதனை செய்து செல்கின்றனர்.

 
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி