முகப்பு /ராமநாதபுரம் /

குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை... பெரியபட்டிணத்தில் கிராமமக்கள் போராட்டம்.. கலெக்டர் அதிரடி உத்தரவு..

குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை... பெரியபட்டிணத்தில் கிராமமக்கள் போராட்டம்.. கலெக்டர் அதிரடி உத்தரவு..

X
மாதிரி

மாதிரி படம்

Ramanathapuram District News | ராமநாதபுரம் பெரியபட்டிணம் பகுதியில் இயங்கிவரும் அரசு மதுபானக்கடையை அகற்றகோரி காத்திருப்பு போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் பகுதியில் இயங்கிவரும் அரசு மதுபானக்கடையை அகற்றகோரி காத்திருப்பு போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணம் கிராமத்தில் அரசு மதுபான கடையானது இயங்கி வருகிறது. இந்த மதுபானக்கடையானது குடியிருப்பு பகுதிக்குள் இயங்கி வருவதால் பொதுமக்கள், பெண்கள், பள்ளிகள் செல்லும் மாணவ, மாணவிகள் அப்பகுதி வழியாக செல்லும் போது சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து வருவாய் துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மதுபானக்கடைக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அப்பகுதி மக்கள் அங்கிருந்து, நகராமல், போராட்டத்தை தொடர்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், அந்த மதுபானக் கடையை தற்காலிகமாக மூடிவைக்க மாவட்ட ஆட்சியர் கூறியதைத் தொடர்ந்து போராட்டமானது வாபஸ் பெறப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram