ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடி அருகே சாலை துண்டிப்பு... 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் கிராம மக்கள்... 

பரமக்குடி அருகே சாலை துண்டிப்பு... 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் கிராம மக்கள்... 

பரமக்குடி அருகே சாலை துண்டிப்பு

பரமக்குடி அருகே சாலை துண்டிப்பு

Ramanathapuram District News | பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலமானது உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி அருகே எஸ்.காவனூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு கூட ஐந்து கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து நீர்நிலைகளில் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலமானது உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் எஸ்.காவனூர் கிராமத்திற்கு செல்லும் பேருந்து பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டம் - கணக்கு தொடங்க ராமநாதபுரத்தில் சிறப்பு முகாம்

மேலாய்குடியில் உள்ள கண்மாயானது நிரம்பி வெங்கட்டாங்குறிச்சி கால்வாய்க்கு செல்லும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால் சாலையில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ, மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மாற்று வழியில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சாலை துண்டிப்பு காரணமாக எஸ்.காவனூர் கிராமத்திற்கு செல்வதற்கு அந்த கிராமத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் சுற்றி சென்று வரும் நிலையில் உள்ளது. விரைந்து சாலையை சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad