Home /ramanathapuram /

மந்திரம் ஓத 15 நாட்கள் பயிற்சி- கிராம கோவில் பூசாரிகள் 150 பேருக்கு சான்றிதழ்

மந்திரம் ஓத 15 நாட்கள் பயிற்சி- கிராம கோவில் பூசாரிகள் 150 பேருக்கு சான்றிதழ்

சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்

ராமேஸ்வரம் கோசாமி மடத்தில் கிராம கோயில் பூசாரிகளுக்கு பயிற்சி முகாமில் பதினைந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடிந்த பின் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ராமேஸ்வரம் கோசுவாமி கிராம கோயில் பூசாரிகளுக்கு பயிற்சி முகாமில் பதினைந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி முடிந்த பின் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தமிழக கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பரவலாக 150-ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 30-ம் தேதி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

பூணூல் அணியும் நிகழ்வு


இந்த பயிற்சி வகுப்பில் கடவுளுக்கு கூறும் உகந்த மந்திரங்களான காயத்ரி மந்திரம், அர்ச்சனை மந்திரம், தியான ஸ்லோகங்கள், அபிஷேக முறைகள் குறித்து தொடர்ந்து 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பூணூல் அணியும் நிகழ்வு


இதையடுத்து, கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயில் முன்பு வேத விற்பன்னர்கள், வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை அமைத்து அனைத்து பூசாரிகளுக்கும் நேற்று அதிகாலை சூரிய உதயத்தின் போது பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், இறுதி நாளான இன்று பயிற்சி பெற்ற அனைத்து பூஜாரிகளுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூசாரிகள் பேரவை நிறுவனர் எஸ்.வேதாந்தம் மற்றும் இதர பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பயிற்சி பெற்ற அனைத்து பூசாரிகளும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி