ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் | இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம் | இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

X
போராட்டத்தில்

போராட்டத்தில் மக்கள்

ramanathapuram | ராமநாதபுரம் ஆட்சியர் அலுலவகத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு போராட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்‌. மங்கலம் அடுத்த பாரனூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் பாரனூரில் உள்ள இந்திரா நகர் ஆதிதிராவிடர் காலணிபகுதியில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிட்டவர்கள், கூலி தொழிலாளி என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பாரனூர் ஆதிதிராவிடர் காலணியில் கிராம‌ நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான 80 ஏக்கர் புறம்போக்கு இடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பின் அப்பகுதி மக்கள் அந்த 80 ஏக்கர் இடத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ராமேஸ்வரம் தீவு பகுதியில் அதிகாலை முதல் பெய்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

இதையடுத்து, இலவச வீட்டுமனைபட்டா இன்னும் வழங்காததால் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைவு தீர்க்கும் கூட்டத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram