ஹோம் /Ramanathapuram /

இலங்கை மன்னனாக விபீஷணனருக்கு பட்டாபிஷேகம்.. - ராமலிங்க பிரதிஷ்டை 2ம் நாள் விழா...

இலங்கை மன்னனாக விபீஷணனருக்கு பட்டாபிஷேகம்.. - ராமலிங்க பிரதிஷ்டை 2ம் நாள் விழா...

விபீஷணருக்கு

விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

Ramanathapuram District: ராமலிங்க பிரதிஷ்டை இரண்டாம் நாள் திருவிழா இலங்கையின் மன்னனாக விபீஷணனை அறிவித்து பட்டாபிஷேக நிகழ்வு கோதண்டராமர் கோயிலில் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராமலிங்க பிரதிஷ்டை இரண்டாம் நாள் திருவிழா இலங்கையின் மன்னனாக விபீஷணனை அறிவித்து பட்டாபிஷேக நிகழ்வு கோதண்டராமர் கோயிலில் நடைபெற்றது.

  ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலின் முக்கிய நிகழ்வாக ஆடித் திருக்கல்யாண திருவிழா, மாசி மகா சிவராத்திரி உற்சவம், ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஆகிய மூன்று திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

  ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த செவ்வாயன்று ராவண வதத்துடன் துவங்கிய நிலையில் நேற்று ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து விபீஷணர் புறப்பாடாகி ராமர் தீர்த்தத்தில் ராமர் லட்சுமணர் மற்றும் சீதா தேவியை அழைத்துக்கொண்டு தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்றார். நேற்று கோயில் நடை காலை 8 மணி அளவில் சாத்தப்பட்டது பின்பு இரவு 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

  ராமேஸ்வரத்திலிருந்து கோதண்டராமர் கோவில் செல்லும் பாதையை காட்டும்  கூகுள் மேப்:

  ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பிற்பகல் ராமர் இலங்கை மன்னனாக விபிஷனரை அறிவித்து பட்டம் கட்டப்பட்டு பின் குடத்தில் இருந்த புனித நீரைத் தெளித்து பட்டாபிஷேக நிகழ்வு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

  இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவுபெற உள்ளது.

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram, Rameshwaram