முகப்பு /ராமநாதபுரம் /

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா.. உற்சாகத்தில் வெங்காளூர் கிராம மக்கள்!

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா.. உற்சாகத்தில் வெங்காளூர் கிராம மக்கள்!

X
10

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா

Fishing Festival After 10 Years : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வெங்காளூர் கிராம கண்மாயில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாரத்தில் உள்ள வெங்காளூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே 2வது பெரிய கண்மாய் ஆகும்.

இந்நிலையில், விவசாயம் செய்து அறுவடை பணிகள் முடிந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தில் கண்மாய் நீர் வற்றத்தொடங்கியது. இதனால் மழைபெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் வெங்காளூர் கிராமத்தில் மீன்பிடி திருவிழாவானது, நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஆண்கள், பெண்கள் என 500 க்கும் மேற்பட்டோர், குடும்பம் குடும்பமாக காலை முதல் கண்மாய்க்கு வந்து கரை ஓரத்தில் காத்திருந்தனர். திருவிழா தொடங்கப்பட்டு கொடியசைக்கப்பட்ட பின் அனைவரும் கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டு மீன்பிடிக்க தொடங்கினர்.

இதையும் படிங்க : இனி சிலிண்டர் தேவையில்லை.. வீட்டில் இந்த சாதனம் இருந்தால் போதும் குப்பைகள் வைத்தே சமைக்கலாம்!

இதில் நாட்டுவகை மீன்களான கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி, போன்ற மீன்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குறைந்தபட்சம் 3 கிலோவிற்கு மேல் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியோடு சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    10 ஆண்டுகளுக்கு பிறகு வெங்காளூர் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழாவானது நடைபெற்றதால், கிராம மக்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு மீன்பிடித்து சென்றனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram