ஹோம் /ராமநாதபுரம் /

உச்சிப்புளி அருகே ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1,100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..

உச்சிப்புளி அருகே ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1,100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - கடல் அட்டை

Ramanathapuram Today News | ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 13 லட்சம் மதிப்பிலான 1,100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்டபம் அருகே துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இதையடுத்து, வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக 1,100 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1100 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

காவல்துறையினர் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் பொருட்கள் அனைத்தையும் அங்கேயை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு 13 லட்ச ரூபாய் இருப்பதோடு, கடல் அட்டையை பதப்படுத்தப்பட்ட பயன்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த கடல் அட்டையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் யாருக்கு சொந்தமான இடமோ அவர்களிடம் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram