ஹோம் /ராமநாதபுரம் /

விவசாயியிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய உத்திரகோசமங்கை வி.ஏ.ஓ... பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..

விவசாயியிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய உத்திரகோசமங்கை வி.ஏ.ஓ... பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..

கைதானவர்

கைதானவர்

Ramanathapuram District News : ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையைச் சேர்ந்த விவசாயி ரமேஷ் இவர் தனக்கும் தனது சகோதரருக்கும் சொந்தமான 7 சென்ட் நிலத்தை பிரித்து பட்டாமாற்றி வழங்க உத்திரகோசமங்கை வி.ஏ.ஓ விடம் சென்று அணுகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயி ஒருவரிடம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கிய நிலையில், கைதான, அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் தனக்கும் தனது சகோதரருக்கும் சொந்தமான 7 சென்ட் நிலத்தை பிரித்து பட்டா மாற்றி வழங்க உத்திரகோசமங்கை வி.ஏ.ஓ விடம் சென்று அணுகியுள்ளனர்.

இந்நிலையில், வி.ஏ.ஓ வாக உள்ள தமிழ் பாண்டியன் விண்ணப்பத்தை பெற்று, ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.1000 வீதம், 7 சென்ட் நிலத்திற்கு 7000 வழங்க வேண்டும் என விவசாயிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய விவசாயி ரமேஷ் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஏஸ்.பியிடம் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர், பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயியிடம் கொடுத்து வி.ஏ.ஓவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

விவசாயி லஞ்சம் பணத்தை வி.ஏ.ஓ விடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வி.ஏ.ஓ தமிழ் பாண்டியனை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் வாங்கிய ரூ.3000 லஞ்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram