முகப்பு /ராமநாதபுரம் /

வைகாசி விசாகம் - மேலவாசல் முருகன் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

வைகாசி விசாகம் - மேலவாசல் முருகன் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

X
மேலவாசல்

மேலவாசல் முருகன் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள்

Melavasal Murugan Temple : ராமநாதசுவாமி கோவிலின் மேலவாசல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியம் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதசுவாமி கோவிலின் மேலவாசல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியம் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இளவேனிற் காலத்தில் விசாக நட்சத்திரத்திரம் ஆறு கூட்டங்கள் ஆகும். முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் திருச்சந்தூரில் அவதாரம் எடுத்தார். அவருக்கு விசாகன் என்று பெயர் உள்ளது. 'வி' என்றால் மயில் என்றும் சாகன் என்றால் பயணம் என்றும், மயில்மேல் பயணம் செய்யக்கூடியவர் என்று அர்த்தம், பௌர்ணமியுடன் வரக்கூடியது வைகாசி விசாகம் நட்சத்திரம் ஆகும்.

மேலவாசல் முருகன் கோவிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள்

இந்நிலையில், வைகாசி விசாகத்தையொட்டி மேலவாசல் பாலசுப்பிரமணியம் கோவிலில் அதிகாலை முதல் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தொடங்கினர். இதன் பிறகு 9:30 மணி அளவில் மேலவாசல் சிறுகுறு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், மயில் காவடி எடுத்து நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து முருகனுக்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அதன்பின் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram, Religion18