Home /ramanathapuram /

வைகாசி அமாவாசை.. பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த ராமேஸ்வரம்; அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் உள்வாங்கியது..

வைகாசி அமாவாசை.. பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த ராமேஸ்வரம்; அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் உள்வாங்கியது..

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Rameshwaram Ramanathaswamy Temple: வைகாசி மாத அமாவாசை மற்றும் கோடை விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே ராமேஸ்வரத்தில் குவியத் துவங்கினர்.

    வைகாசி மாத அமாவாசை மற்றும் கோடை விடுமுறை நாளையொட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 50 அடி தூரத்திற்கு கடல்  உள்வாங்கி இருப்பதால் பக்தர்கள் நீராடுவதற்கு சிரமம் அடைந்தனர்.

    உலக பிரசித்தி பெற்ற  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தீர்த்தம், மூர்த்தி, என முப்பெருமைகளையும் கொண்டது, திருக்கோயிலில் இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும். வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள் பிண்டம் வைத்து அக்னி தீர்த்த கடற்கரையில் திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

    இதையடுத்து,  ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே ராமேஸ்வரத்தில் குவியத் துவங்கினர்.

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி கோவிலில் உள்ளே உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி தற்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாத அமாவாசை என்பதாலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்பதாலும் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் குளிப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு தற்போது தீர்த்த நீராடி வருகின்றனர்.

    கடல் உள்வாங்கி காணப்படுவதால் பக்தர்கள் குளிக்க சிரமமாக உள்ளது.மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அவர்களின் உத்தரவின் பேரில் ராமேஸ்வரத்தில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் இன்று ராமேஸ்வரம் வருகை தந்த காரணத்தினால் தற்போது ராமேஸ்வரம் பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்துள்ளது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி