ஹோம் /ராமநாதபுரம் /

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. பரமக்குடி தரைப்பாலத்தை 3வது முறையாக தொட்டு செல்லும் தண்ணீர்.. போக்குவரத்து பாதிப்பு.. 

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. பரமக்குடி தரைப்பாலத்தை 3வது முறையாக தொட்டு செல்லும் தண்ணீர்.. போக்குவரத்து பாதிப்பு.. 

பரமக்குடி

பரமக்குடி

Paramakudi | வைகை ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் பரமக்குடி - எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramakudi | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தை தொட்டு செல்லும் தண்ணீரால் தரைப் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து சுமார்  7 ஆயிரம் கனஅடி மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை இதனை ஒட்டியுள்ள பிற்பகுதியிலும் பெய்த மழை நீரும் வைகை ஆற்றில் தற்போது கலந்து வந்து கொண்டுள்ளது.

பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து மூன்று நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மதகு அணையின் வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் கமுதக்குடி, தெளிசாத்தநல்லூர் கண்மாய்களுக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் படிக்க:  வலசைக்காக தனுஷ்கோடியில் குவியும் வண்ணத்துபூச்சிகள்.. வாகனங்களில் அடிபட்டு  இறக்கும் அவலம்..

மீதமுள்ள 5000 கன அடி தண்ணீர் பரமக்குடி வைகை ஆற்றில் ராமநாதபுரம் நோக்கி செல்கிறது . வைகை ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் பரமக்குடி - எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

இதனால் தரை பாலத்தின் இரு கரைகளிலும் பேரிகார்டர்கள் வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இருகரைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாலத்தில் கடந்து செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பரமக்குடி வைகை ஆற்றில் இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக தரைப்பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்வது குறிப்பிடத்தக்கது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram, Vaigai