வைகை தண்ணீர் இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயங்கள் வறண்டு காணப்படுகிறது. இதுசுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, சாயல்குடி அருகே மேல செல்வனூர், ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய், நயினார் கோவில் செல்லும் சாலையில் தேர்த்தங்கல் ஆகிய 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் காஞ்சிரங்குளம், சித்தரங்குடி ஆகிய 2 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு நவம்பர் மாதம் முதல் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கும். இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் ஏப்ரல் மாதம் திரும்பிச் செல்லும். இந்த சரணாலயங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருவதால் கடந்த மாதத்திற்கு முன்பே அனைத்து பறவைகளும் திரும்பி சென்று விட்டன.
இந்த நிலையில் மதுரை வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை நீர் திறக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் உள்ளிட்ட பல கண்மாய்களுக்கு வைகை நீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து பாதிப்பு:
ராமநாதபுரம் பெரிய கண்மாய், காரைக்குடி கண்மாய், சக்கரக்கோட்டை, திருவாசமங்கை கலக்குடி மற்றும் பரமக்குடி அருகே உள்ள பல கண்மாய்களும் வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பி உள்ளன. ஆனால் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காஞ்சிரங்குளம் மற்றும் சித்திரங்குடி பறவைகள் சரணாலயங்களுக்கு நீர் வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ராமநாதபுரம் விவசாயிகளே... பிரதமர் நிதி கிடைக்க உடனே இதை செய்யுங்கள்...
இதனால் இந்த 2 சரணாலயங்களுக்கும் வைகை தண்ணீர் வராமல் வறண்டு காணப்படுகிறது. மழை சீசன் தொடங்க ஒரு மாதமே உள்ளதால் கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் அதிக அளவு மழை இருக்கும் என்று எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
எனவே முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காஞ்சிரங்குளம், சித்திரங்குடி உள்ளிட்ட பல கண்மாய்களுக்கும் நீர்வரத்து பாதையை சரிசெய்து தண்ணீர் கொண்டுவரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காஞ்சிரங்குளம், சித்திரங் குடி ஆகிய பறவைகள் சரணாலயங்களுக்கு சர்வதேச அமைப்புகள் மூலம் ராம்சர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டும் தண்ணீர் இல்லாமல் இந்த பறவைகள் சரணாலயங்கள் வறண்டு போய் காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram