ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு மீனவர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வடகாடு பகுதியில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 50-ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி சேதமானதனைத் தொடர்ந்து புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மே மாதம் பணி துவங்கப்பட்டது.
இதையடுத்து, பணி துவங்கி ஒப்பந்ததாரர் பேஸ் மட்டம் போட்டு பில்லர் கட்டும் பணிகள் நடைபெற்று கட்டிடப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது, இதற்கான காரணம் கேட்டபோது அரசிடம் இருந்து முதல் தவணை நிதி தங்களுக்கு வழங்கபடவில்லை எனவும் நாங்கள் சொந்த செலவில் பள்ளி கட்டிடங்கள் முழுவதும் கட்டி முடித்துவிட்டால் அரசு தரப்பில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம், அதனால் தற்போது பணி நிறுத்தப்பட்டு அரசிடம் வரும் நிதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.

அங்கன்வாடி
இந்நிலையில் தற்போது பள்ளிக் கட்டிடம் இல்லாத காரணத்தினால் அதன் அருகே பால்வாடி மையத்தில் தற்போது 50 குழந்தைகள் பயின்று வருகின்றனர், அந்தப் பள்ளிக்கூட கட்டிடம் மேற்கூரை விரிசல் விட்டு பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பால்வாடி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக இந்த குழந்தைகள் பகுதியில் தற்போது சமையலும் செய்து வருகின்றனர், இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் தற்போது மழைக்காலம் துவங்க உள்ள சூழலில் தரமற்று இருக்கும் பால்வாடி பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் மிகப்பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,

பள்ளிகட்டிடம்..
சம்பந்தப்பட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதியும் பாதுகாப்பு கருதியும், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும், அதேபோல இந்த பள்ளிக்கூடத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.