முகப்பு /ராமநாதபுரம் /

சுட்டெரிக்கும் பங்குனி வெயில்... சூடு தாங்கமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகும் ராமேஸ்வரம் பக்தர்கள்!

சுட்டெரிக்கும் பங்குனி வெயில்... சூடு தாங்கமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகும் ராமேஸ்வரம் பக்தர்கள்!

X
ஓட்டமெடுக்கும்

ஓட்டமெடுக்கும் ராமேஸ்வரம் பக்தர்கள்

Ramanathapuram District | ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுட்டெரிக்கும் பங்குனி வெயிலால், சாலைகளில் நடக்க முடியாமல் ஓடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், உலகபிரசித்த பெற்றதாகவும்,  காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிவருகிறது. அத்துடன், பண்ணிரண்டு ஜோதி லிங்கங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இதனால் ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும். வெளிநாடுகளில் இருந்தும் வந்து புனித நீராடி, சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், காலணிகள் இல்லாமல் செல்வதாலும், காலணிகள் ஒரு கோபுரவாசலில் கழட்டு விட்டு சென்று மறுபக்க கோபுர வாசலில் வழியாக வருவதாலும் வெயிலில் சூடு தாங்காமல், ஒதுங்கி நிற்க நிழற்குடைகள் எதுவும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

அக்னி நட்சத்திரம் வெயிலுக்கு முன்பே வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்க நிழற்குடைகள் அமைத்தும், கூலிங் பெயின் அடித்தும் நடைபாதை அமைக்க வேண்டும் என்று பக்தர்களும் சமூக ஆர்வலர்களும், கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram