ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடி அருகே டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடனை தேடும் போலீஸார்..

பரமக்குடி அருகே டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர்.. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடனை தேடும் போலீஸார்..

சிசிடிவி

சிசிடிவி காட்சி

Ramanathapuram - Paramakudi | ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Paramakudi

ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். பரமக்குடி பெருமாள் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல் இரவில் தனது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில்,அவ்வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் அங்கு நிற்பது போல் நின்று அங்கும் இங்கும் பார்த்து ராமச்சந்திரனின் இருசக்கர வாகனத்தை சாமர்த்தியமாக திருடி சென்றுள்ளார்.

மேலும் படிக்க:  தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

மர்மநபர் இருசக்கர வாகனத்தை திருடிக் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகி உள்ளது.இதையடுத்து, ராமச்சந்திரன் புகாரின் பேரில் பரமக்குடி டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram