ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் சாலையில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு... சிசிடிவி மூலம் மர்ம நபருக்கு வலை...

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் சாலையில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு... சிசிடிவி மூலம் மர்ம நபருக்கு வலை...

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

Ramanathapuram District News : ராமநாதபுரத்தில் பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் நபர், இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடும் பணியில் காவல்துறையினர்,

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் மருந்து கடையில் அதே பகுதியை சேர்ந்த காஜாமைதீன் என்பவர் மருந்து வாங்குவதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

இந்நிலையில், மருந்து வாங்க வந்த அவர் இருசக்கர வாகனத்தை மருந்து கடை எதிரே நிறுத்திவிட்டு சாவியை வண்டியில் வைத்தபடியே மறந்துவிட்டு மருந்து கடைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, மருந்து கடையில் மருந்தை வாங்கி விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த இரு சக்கரம் வாகனம் நிறுத்திய இடத்தில் இல்லாமல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க : விவசாயியிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய உத்திரகோசமங்கை வி.ஏ.ஓ... பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்..

இதனையடுத்து, மருந்து கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அங்கு நின்ற ஒரு மர்ம நபர் பைக்கில் சாவி இருப்பதை நோட்டமிட்டு பார்த்து கொண்டு பின் பைக்கை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது.

இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர் மீது நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனத்தை மீட்டு தருமாறு காஜாமைதீன் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனிடையே, தற்போது இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்ம நபர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram