முகப்பு /ராமநாதபுரம் /

பாம்பன் தூக்குப்பாலத்தில் 2 நாட்களாக காத்திருந்த இழுவை கப்பல்கள்..

பாம்பன் தூக்குப்பாலத்தில் 2 நாட்களாக காத்திருந்த இழுவை கப்பல்கள்..

X
2

2 நாட்களாக காத்திருந்த கப்பல்

Rameshwaram Pampan Bridge : பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக காக்கிநாடா துறைமுகம் சென்ற இழுவை, மிதவைக் கப்பல்கள் கடந்து சென்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் தூக்கு பாலம் உலகப் புகழ்பெற்ற ஒன்று. நூற்றாண்டைக் கடந்த பாம்பன் ரயில் பாலம் கடல் பாதை வழியாக கொல்கத்தா, அந்தமான் தீவுகளுக்கு செல்லலாம்.

அந்த வகையில் பாம்பன் தூக்குபாலம் திறக்கப்பட்டு ஒவ்வொன்றாகக் கடந்து சென்ற விசைப்படகுகள், இழுவைக் கப்பல்கள், மிதவைக் கப்பல், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி காக்கிநாடா சென்றது. சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் பாம்பன் சாலைப் பாலத்தில் நின்று ரசித்தனர்.

2 நாட்களாக காத்திருந்த கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலமானது மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தப் பாலத்தில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்தப் பாலம் வழியாக, கப்பல்கள் தூக்குபாலம் திறக்கப்பட்டு தெற்கு பகுதியில் கேரளா, மும்பை ஆகிய‌ மாநிலங்களுக்கு செல்லும், வடக்கு பகுதியில் காக்கிநாடா, விசாகப்பட்டினம், சென்னைப் போன்ற பகுதிகளுக்கு செல்லும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், 2 நாட்களாக காத்திருந்த 2 இழுவை கப்பல்கள், ஒரு‌ மிதவை கப்பலை இழுத்து மும்பையில் இருந்து காக்கிநாடாவிற்கும், கேரளா மாநிலம் விளஞ்சியத்தில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்றது. இதனைப் பாம்பன் சாலைப் பாலத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் கப்பல்கள் தூக்குபாலத்தைக் கடந்து செல்வதை ரசித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram