ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த தங்கச்சிமடத்திற்கும் அக்காள்மடத்திற்கும் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு ஸ்ரீ சுமைதாங்கி முத்து தர்ம முனீஸ்வரர் ஆலயம்.
கோவிலில் சிறப்புகள்:-
இந்த கோவிலானது 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலுக்கு பின்பு அங்கிருந்த மக்கள் தங்கச்சிமடம் பகுதியில் இடம்பெயர்ந்த போது இங்கு இந்தக் கோவில் அமைந்திருந்ததாகவும் காலப்போக்கில் அக்கோவிலை ஊர்தெய்வமாகவும் வழங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
ராணி மங்கம்மாள் மதுரையை ஆண்டு கொண்டிருக்கும் போது ராமேஸ்வரத்திற்கு வந்ததாக வரலாறுகள் நிறைய உண்டு. ராணிமங்கம்மாள் வருகைக்காக சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை அமைக்கபட்ட போதே இந்தக் கோயில் இருந்ததாக சர்வே எண்களில் காட்டப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவர்களுக்கு முன்பு ஐந்து தலைமுறையினர் இக்கோவிலை வழிபட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். அவ்வளவு பழமையான கோவிலாக இக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே இருக்கும் மரத்திற்கு 100 வயது இருக்கும் என்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு குலதெய்வங்கள் உண்டு. ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து வணங்குவதே இந்த தெய்வத்தை தான். வெளியூர்களில் இருந்தாலும் கோவில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கட்டாயமாக வந்து கலந்து கொள்வார்கள்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஸ்ரீ சுமைதாங்கி முத்து தர்ம முனீஸ்வரர் ஆலயம் செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..
ராஜாக்கள் மானியமாக கொடுத்த இடத்தில் இந்த கோயில் உருவானதாகவும், தற்போது கோவில் நிலத்தை யாரும் பராமரித்து காப்பாற்றதாலும் அரசாங்க நிலமாக மாறி விட்டதாகவும் கூறுகின்றனர். இக்கோவிலானது மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.