ஹோம் /ராமநாதபுரம் /

ராமபிரானால் உருவாக்கப்பட்ட ராமர் தீர்த்தம்..! இதன் வரலாறும், சிறப்புகளும் தெரிஞ்சுக்கோங்க..!

ராமபிரானால் உருவாக்கப்பட்ட ராமர் தீர்த்தம்..! இதன் வரலாறும், சிறப்புகளும் தெரிஞ்சுக்கோங்க..!

ராமர்

ராமர் தீர்த்தம்

Ramar Theertham | ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றிலும் 108 தீர்த்தங்களுக்கு மேல் உள்ளது. அதில் சில கண்டறிந்தோம், சில கண்டறியப்படாமலும் உள்ளது. அதில் ராமேஸ்வரத்தில் மட்டும் 68 தீர்த்தங்கள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் உள்ள முக்கிய தீர்த்தங்களில் மிக முக்கியமானது இந்த ராமர் தீர்த்தம். இத்தீர்த்தம் ராமாயாணத்தில் வரலாற்றில் ராமரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தத்திற்கு இன்னொரு சிறப்பான இரண்டு வரலாறும் உண்டு, அதை பற்றி விரிவாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..

ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றிலும் 108 தீர்த்தங்களுக்கு மேல் உள்ளது அதில் சில கண்டறிந்தும், சில கண்டறியப்படாமலும் உள்ளது. அதில் ராமேஸ்வரத்தில் மட்டும் 68 தீர்த்தங்கள் உள்ளன. இதில் 22 தீர்த்தங்கள் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உள்ளே உள்ளது.

இங்கு உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு, இதில் புனித நீராடினால் ஓவ்வொரு நன்மைகளும் பயக்கும். அதில் மிக முக்கியமான தீர்த்தம் ஒன்று தான் ராமர் தீர்த்தம். இந்த தீர்த்தமானது ராமநாதசுவாமி ஆலயத்தில் மேற்கு கோபுரத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க :தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

ராமர் தீர்த்தமானது, ராவணனை கொன்று தன் பாவத்தை போக்க ராமபிரானால் வில் அம்பு எய்து, உருவாக்கப்பட்டது. அதன் நினைவாக தான் ராமர் தீர்த்தம் என்று பெயர் சூட்டப்பட்டது

ராமர் தீர்த்தத்தில் அகஸ்திய மகரிஷியின் சிஷ்யரான சுதீஷ்ணன் இங்கு விதிப்படி ஸ்நானம் செய்து ஸ்ரீராம மந்திரத்தை சாதகாலம் ஜபம் செய்து வந்ததத்தின் பலனாக சீதாஸகிதானக ஸ்ரீ ராகவனை நேரில் தரிசித்தான். இந்த தரிசனத்தால் சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவனாக தன் சதிரத்தை விட்டு அன்னிய சரிதத்திற்குள் புகும் தன்மை கொண்டு, யாருடைய கண்ணிலும் தென்படாமல், யார் கண்ணிலும் படாமல் ஆகாயம் செல்லுதல் எந்த லோகத்திற்கும் செல்லும் சாமர்த்தியம் பெற்றான்.

இதையும் படிங்க : இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது...

ஈ, எறும்பு முதல் தேவதையை வரை யாருடனும் பேசும் திறமை பார்க்க முடியாதவற்றை பார்த்தல் இதுபோன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட எல்லா சாமர்த்தியங்களையும் அடைந்தான். ஆகவே இந்த தீர்த்தம் சகல வித விருப்பங்களையும் பூர்த்தி செய்யகூடியது இந்த ராமர் தீர்த்தம்.

இன்னொரு வரலாறாக ஒரு பொய் பேசியதால், தர்மர் துரோணாச்சார்யாவைக் கொள்கிறார். இதையடுத்து, குருவைக்கொன்ற தனது பாவத்தை போக்குவதற்காக ஆலோசனை பெற வியாச மகரிஷியிடம் செல்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மகரிஷியிடம் சென்ற தர்மருக்கு வியாசமகரிஷி கூறியதாவது குருவை கொன்ற தனது பாவத்தை கழுவ ராமர் தீர்த்தத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.மகரிஷியின் ஆலோசனைப்படி தர்மர் தீர்த்தத்தில் குளித்ததால் பாவங்கள் நீங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram