Home /ramanathapuram /

Ramanathapuram : தொடங்கியது டியூப் கணவாய் மீன்கள் சீசன்.. பாம்பனில் இருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி..

Ramanathapuram : தொடங்கியது டியூப் கணவாய் மீன்கள் சீசன்.. பாம்பனில் இருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - டியூப் கணவாய் மீன்கள்

Pamban Squid Fish : அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடக்கம்.. அதிகளவில் கிடைப்பதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாம்பன்‌ தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மன்னார் வளைகுடா பகுதிக்கு சென்ற நிலையில் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் டியூப் கணவாய் மீன்கள் சிக்கி உள்ளன.

சைக்கிள் டியூப் போன்று இருப்பதால் இதை டியூப் கனவாய் என்று மீனவர்கள் அழைக்கின்றனர், இது கனவாய் வகையில் ஒரு வகைப்படும். ஒரு அடிநீளம் வரையில் இருக்கும். இதற்கு ஊசி கணவாய் என்று மற்றொரு பெயரும் உண்டு.

டியூப் கணவாய் மீன்கள்


இந்த கணவாய் மீன்கள் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். தற்போது ஒரு கிலோ ரூ.200 முதல் ரூபாய் 250 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து வியாபாரிகள் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த வகை கணவாய் மீன்கள் பெரிய வகை மீன்களிடம் இருந்து தப்பிக்க கருப்பு நிறத்தில் திரவம் போன்று வெளியிட்டு எதிரிகளிடம் இருந்து தப்பித்துச்செல்லும் தன்மையுடையது. உணவுக்காக மட்டுமே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த மீனில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து தரக்கூடிய ஒமேகா-3  சத்து இருப்பதால் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். மேலும்  நீரழிவு நோயினால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும். இதை சுத்தம் செய்து பதப்படுத்திய பின்பு ஐஸ் வைத்து லாரிகள் மூலம் கொச்சிக்கு அனுப்பப்படுகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி