முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் கொளுத்தும்‌ வெயிலில் அமர்ந்து பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

பரமக்குடியில் கொளுத்தும்‌ வெயிலில் அமர்ந்து பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்!

X
பழங்குடியின

பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

Ramanathapuram district | பரமக்குடியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுள் இனச்சான்று மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramakudi, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுள் இனச்சான்று மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி,தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடியில் உள்ள வேந்தோணி, சத்திரக்குடி, லீலாவதி நகர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்கள் குருவிக்காரர், நரிக்குறவர், மலைக்குறவர் மற்றும் காட்டுநாயக்கர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

பல வருடங்களாக இங்கே வசித்துவரும் இவர்களுக்கு, குடிமனை பட்டா மற்றும் இனச்சான்று வழங்க கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இதனை கண்டித்து வீட்டுமனை பட்டா மற்றும் இனச் சான்று வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கொளுத்தும் வெயிலில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் அனைவரும் அலுவலகம் முன்பாக அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

First published:

Tags: Local News, Paramakudi Constituency, Protest, Ramanathapuram