முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் குடிநீர் கேட்டு திருநங்கைகள் திடீர் சாலை மறியல்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு..

பரமக்குடியில் குடிநீர் கேட்டு திருநங்கைகள் திடீர் சாலை மறியல்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு..

X
பரமக்குடியில்

பரமக்குடியில் குடிநீர் கேட்டு திருநங்கைகள் திடீர் சாலை மறியல்

Transgenders Block Road In Paramakudi : பரமக்குடி அருகே திருநங்கை நகர்‌ பகுதியில் குடிநீர் கேட்டு திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திருநங்கை நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியானது பரமக்குடி நகர் பகுதியிக்கு அருகாமையில் அமைந்தும், எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமல் திருநங்கைகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், குடிதண்ணீர் குழாயில் மாதத்திற்கு ஒரு முறை கூட குடிநீர் முறையாக வருவதில்லை. இதனால் குடிதண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. தினசரி உணவுக்கே வழியின்றி வறுமையில் கஷ்டப்படும் நிலையில் குடிதண்ணீருக்காக மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

பரமக்குடியில் குடிநீர் கேட்டு திருநங்கைகள் திடீர் சாலை மறியல்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் வேந்தோணி விலக்கு என்ற 4 வழிச்சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram