ஹோம் /ராமநாதபுரம் /

பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபத்திலிருந்து புறப்படும் ரயில்கள்

பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வு- ராமேஸ்வரத்துக்கு பதிலாக மண்டபத்திலிருந்து புறப்படும் ரயில்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட அதிக அதிர்வு காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் பொருத்திய கண்காணிப்பு கருவி ரயில்கள் ஓடும்போது பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக ஏற்படுவதாக அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (23.12.22) மாலை 06.00 மணிக்கு புறப்படும் மதுரை விரைவு ரயில் (06656) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், இன்று ராமேஸ்வரத்தில் இருந்து முறையே மாலை 04.20, 05.20 மணிக்கு மற்றும் இரவு 08.20, 10.30 மணிக்கு புறப்படும் திருப்பதி, சென்னை எழும்பூர் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்), ஓஹா விரைவு ரயில்கள் ஆகியவை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பாம்பன் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியில் அதிர்வு குறைந்தால் மட்டுமே ரயில் மீண்டும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

First published:

Tags: Local News, Ramanathapuram