ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கும் பயிற்சி

ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கும் பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

Ramanathapuram | ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழி எழுத்துக்களைப் படிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் படிக்கும் பயிற்சி ராமநாதபுரம் தொல்லியல் துறையினர் சார்பாக கற்றுக் கொடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தொல்லியல் துறையினர் சார்பில் வாளாந்தரவை அடுத்த ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகள் எவ்வாறு படிப்பது என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய நடுகற்கள், மோதிரங்கள், மலைக் குகைகள், முத்திரைகள், பானை ஓடுகள், காசுகள் பயன்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அழகன்குளம், கீழடி, தேரிருவேலி உள்ளிட்ட அகழாய்வுகளில் கிடைத்த மட்கலங்களில்  எழுதப்பட்ட எழுத்துப் பொறிப்புகள் மூலம் அறியலாம் என தமிழி கல்வெட்டுகள் பற்றி மாணவர்களுக்கு அறிமுகம்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அறிமுகத்தின்பின்பு நடந்த பயிற்சியில் கல்வெட்டு எழுத்துகளை மாணவர்களை எவ்வாறு அறியலாம் என்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜாகுரு எழுதக் கற்பித்தார்.

இதையடுத்து, கற்பித்து கொண்ட மாணவர்கள் தங்கள் பெயர், பெற்றோர் பெயர், நண்பர்கள் பெயர்கள், ஆசிரியர் பெயர்களை கல்வெட்டு எழுத்துகளில் எழுதி ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர்.

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் உள்ள சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும் என்ற பாடத்தின் விளைவாக தமிழி கல்வெட்டு எழுத்துகளை கற்றுக் கொண்டதாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் தெரிவித்தனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram