ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தில், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாகவும், பல ரயில்கள் மண்டபத்தில் இருந்த புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்க கடலுக்குள் அமைந்துள்ளது பாம்பன் ரயில் பாலம். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி இரவு ராமேஸ்வரத்திற்கு பயணிகளுடன் ரயில் ஒன்று வரும்போது தூக்குப்பாலத்தில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. இது பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நேக்கி வரும் பயணிகள் ரயிலும் கடந்த 17 நாட்களாகவே ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றனது. சென்னையில் இருந்து வரும் இரண்டு ரயில்கள் மட்டும் மண்டபம் வரை இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாம்பன் ரெயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரெயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் [மெயின் லைன் (16751/16752), கார்ட் லைன் (22661/22662) வழி ரயில்கள்], திருப்பதி ராமேஸ்வரம் திருப்பதி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (16779/16780), கன்னியாகுமரி - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (22622/22621), அஜ்மீர் - ராமேஸ்வரம் - அஜ்மீர் (20973/20974), பனாரஸ் - ராமேஸ்வரம் - பனாரஸ் (22536/22535), ஓஹா - ராமேஸ்வரம் - ஓஹா (16734/16733) வாராந்திர விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள், அயோத்தியா கண்டோண்மென்ட் - ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோண்மென்ட் (22614/22613), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (20896/20895), ஹூப்ளி - ராமேஸ்வரம் - ஹூப்ளி (07355/07356), கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் (16618/16617), செகந்திராபாத் - ராமேஸ்வரம் - செகந்திராபாத் (07695/07696) வாராந்திர விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..
திருப்பதி ராமேஸ்வரம் விரைவு ரயிலின் இணை ரயிலான ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06780) மறு அறிவிப்பு வரும் வரை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Train