ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் நடைபெறும் ஐ.ஐ.டி நிறுவனத்தின் ஆய்வுக்கு பின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 31-ம் தேதி வரை ரயில் போக்குவரத்து மண்டபத்தில் இருந்து நடைபெறும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணத்தினால் தூக்குபாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 28, 29, 30 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 29 முதல் 31 வரை திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதையடுத்து, இதே நேரத்தில் புறப்பட வேண்டிய, வருகை தரவேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360548465 அலைபேசி எண்ணுடனும், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360544307 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக்கொள்ளவும்.
செய்தியாளர்: மனோஜ் குமார், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram