ஹோம் /ராமநாதபுரம் /

தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்..

தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்..

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் தனுஷ்கோடி

Dhanushkodi | ஆபத்தான முறையில் ஆழம் நிறைந்த தனுஷ்கோடி கடற்கரை பகுதியில்  குளிக்கும் சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் குளிப்பவர்களை சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் வேண்டுகோள்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ஆழம் நிறைந்த தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிக பயணிகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் தருகின்றனர்.

இதையடுத்து, பள்ளிகள் தேர்வுகள் முடிந்து நவராத்திரி விழா, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை போன்ற தொடர் விடுமுறை ஒட்டி ராமேஸ்வரத்திற்கு ஏளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

மேலும் படிக்க:  பார்ப்போரை கவர்ந்திழுக்கும் ராமநாதபுரம் நீர் பறவை சரணாலயம் - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

பள்ளி விடுமுறையை முன்னிட்டு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள், தேவிபட்டினம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, கோடியக்கரை ஆகிய பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

ராமநாதபுரம்

இந்நிலையில், தனுஷ்கோடியின் அழகை ரசிக்க அரிச்சல்முனை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அலையின் சீற்றத்தை பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து விளையாடுகின்றனர்.

மேலும் படிக்க:  ரூ.5,000 வரை விலை: உணவகங்களில் கிராக்கி- தடியன் மீனின் சிறப்புகளை விவரிக்கும் மீனவர்கள்

இங்கு அடிக்கடி அடையாளம் தெரியாத நிலையில் மனித உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கும். பல வருடங்களாக இப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் காணாமல் போவதும் சில நாட்களுக்கு பிறகு அடையாளம் தெரியாமல் கரை ஒதுங்குவதும் வழக்கமாக உள்ளது.

ராமநாதபுரம்

மீனவர்களே நீந்த முடியாத ஆபத்தான கடல் பகுதியானது இந்த அரிச்சல்முனை கடல், குளிப்பதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி என்று பல பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆபத்தை உணராமல் தடையைமீறி குடும்பத்துடன் குளிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுவரையில் தடையை மீறி குளித்த 20-க்கும் மேற்பட்டோர் கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் கண்காணித்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மீனவ மக்கள் வேண்டுகோள்..

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram