ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் நரிக்குறவ இன மக்களின் கடைகளில் பறக்கும் தேசியக்கொடி.. நெகிழும் சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரத்தில் நரிக்குறவ இன மக்களின் கடைகளில் பறக்கும் தேசியக்கொடி.. நெகிழும் சுற்றுலா பயணிகள்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - நரிக்குறவ மக்கள்

Rameshwaram Narikuvars hoist Flags at Shops : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நான்கு ரத வீதிகளிலும் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நரிக்குறவ மக்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நான்கு ரத வீதிகளிலும் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் நரிக்குறவ மக்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் இந்நிகழ்வு பார்க்கும் சுற்றுலா பயணிகளை நெகிழ்ச்சியடையச் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் நான்கு ரத வீதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் சாலையோரத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களிடம் பச்சை குத்துதல், பாசி விற்பனை மற்றும் மூலிகை தைலம் போன்ற பொருட்கள் விற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சாலையோரக்கடைகளை அதிகாலையில் திறக்கும் முன்பு அனைவரும் கடைகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து வியாபாரம் செய்கின்றனர், இரவு கடைகளை அடைக்கும் முன்பு கொடியை இறங்குகின்றனர்.

இதையடுத்து, சாமி தரிசனம் செய்ய வரும் வெளிமாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இவர்களோடு புகைப்படம் எடுத்து நெகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் இவர்களை பார்க்கும் பொழுது மனதில் தேசப்பற்று இன்னும் அதிகரிக்கிறது, தேசிய கொடி ஏற்றி வைத்து உற்சாகமாக வியாபாரம் செய்கின்றனர், சாமி தரிசனம் பார்க்கலாம் என்று வந்தோம், இதுபோன்ற செயலை பார்க்கும் போது நன்றாக இருந்தது, எங்களது ஊர்களுக்கு சென்று தாங்களும் இதுபோன்று வீடுகள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் தேசிய கொடி ஏற்றி 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Published by:Arun
First published:

Tags: Independence day, Local News, Ramanathapuram