Home /ramanathapuram /

சூரை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா..!

சூரை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா..!

சூரை

சூரை மீன்

Soorai (Tuna) Fish : பாம்பன்  மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு டன் கணக்கில் சூரை மீன்கள் கிடைத்த போதிலும், குறைந்த விலைக்கே வியாபாரிகள் வாங்கி சென்றதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க 90-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் மீன் பிடித்து இன்று அதிகாலை பாம்பன் துறைமுகத்திற்கு திரும்பி வந்தனர்.

இதையடுத்து, துறைமுகத்தில் குவியல் குவியலாக  சூரை மீன்கள் பெட்டியில் வைத்து அடுக்கி வரத்து அதிகமாக வந்ததாக கூறினர். இருப்பினும் குறைந்த விலைக்கே  விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

சூரை மீன்களானது கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது, கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.  தற்போது இந்தவகை மீன்களின் சீசன் ஆகும், நவம்பர் மாதம் வரை டன் கணக்கில் சூரை மீன்கள் கிடைக்கக்கூடும்.

சூரை மீன்


Tuna என்றழைக்க கூடிய மீன் வகையைச் சேர்ந்ததாகும், மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் தான் இவை வாழ்கிறது, பாறைக்குள் குவியலாக தான் இருக்கும். 6 இஞ்ச் முதல் 10 இஞ்ச் நீளம் வரை வளரக்கூடியது,

மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், தேனி, சிவகங்கை, ஈரோடு வரையிலும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் உணவு பாறையில் ஒட்டிருக்கும் பாசிகளே.

சூரை மீன்


மருத்துவ குணங்கள்:

ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்து. அதிக புரதசத்துக்களையும், குறைந்த கொழுப்பு சத்துக்களையும் கொண்டுள்ளன.

குழந்தைகளுக்கான சிறந்த உணவு இந்த மீன் என்கின்றனர். ஏனென்றால், ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைபாட்டையும், நடத்தை குறைபாடுகளையும் சரிசெய்யும் DHA என்கிற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

சூரை மீன்


பெரியவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது, குறைந்த ரத்த அழுத்த பிரச்னையை போக்கி, சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல், ஜீரண பிரச்னைகள் தவிர்க்கிறது. சருமத்தை முதுமை காலத்தில் சுருங்குதலில் இருந்து பாதுகாக்கிறது. தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் முட்கள் மற்ற மீன்களைப் போல இருப்பது இல்லை, அதனால் சமைப்பதற்கும், உண்பதற்கும் எளிதானவையாக உள்ளது. ரத்த அழுத்தம், நீரழிவு பாதிப்பு, கண் பார்வை, மூளை சார்ந்த பிரச்னை, ரத்த சோகை உள்ளவர்கள் தொடர்ந்து இந்தவகை மீனை பயன்படுத்தினால் விரைவில் பலன் தரும்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி