ராமநாதபுரம் மாவட்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (15-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை மற்றும் ரெகுநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்று ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மின் தடை பகுதிகள்:
ராமநாதபுரம், சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். தாயுமானசாமி கோவில்தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், பட்டணம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், அரசு மருத்துவமனை சாலை,
அரண்மனை, வடக்குத்தெரு, நீலகண்டி ஊருணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதுனாள்ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலைத்தெரு, ரோமன் சர்ச், பெரிய பஜார், யானைக்கல் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டைமேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன்வயல், நொச்சிஊருணி, பயோனியர் மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ரெகுநாதபுரம் பகுதி:
எட்டிவயல், ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்குவாணிவீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாங்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், பிச்சாவலசை, உத்தரவை மற்றும் தாதனேந்தல் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது.
Must Read : புஷ்பா படத்தின் ஃபேமஸ்ஸான இந்த சீன் நம்ம தென்காசியில் தான் எடுக்கப்பட்டது - எங்கு தெரியுமா?
கீழச்செல்வனூர் சுற்று வட்டார பகுதிகள்:
சாயல்குடி அருகே வாலிநோக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கல், கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர், கீழக்கிடாரம், மேலக்கிடாரம், கொத்தங்குளம், சிறைக்குளம், பன்னந்தை, தத்தங்குடி, மறவாய்க்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்க்குடி, வாலிநோக்கம், தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன பகுதிகள், தனியார் உப்பு நிறுவன பகுதிகள் மற்றும் இறால் பண்ணைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram