முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை

மின் தடை

மின் தடை

Ramanathapuram District | ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை (நவம்பர் 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில், நாளை மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Must Read :ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

எனவே, இப்பகுதி பொதுமக்கள் மின்தடை செய்யப்படும் மேற்கண்ட நேரங்களில், மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, பரமக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பரமக்குடி நகர் முழுவதும், சத்திரக்குடி, நயினார்கோவில், கமுதக்குடி, சிட்கோ, பெருமாள் கோவில், எமனேஸ்வரம், மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என பரமக்குடி உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்திருக்கிறார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram