Home /ramanathapuram /

பாஜகவினருக்கு கொலை மிரட்டல்.. அகோரிகளை அழைத்து வந்து போராட்டம்.. ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

பாஜகவினருக்கு கொலை மிரட்டல்.. அகோரிகளை அழைத்து வந்து போராட்டம்.. ராமநாதபுரம் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்..

    பாஜகவினரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல்– காவல் நிலையங்களில் புகார்

    ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் EMT கதிரவன் மற்றும் பாஜக கட்சி குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஒருமையில் இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வீடியோவில் பேசி பதிவிட்ட கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த நாகேந்திரபாண்டி என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி அபிராமம், கமுதி, கடலாடி உள்ளிட்ட பகுதியில் பாஜக நிர்வாகிகள் தாங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் புகார் மனுக்களை அளித்தனர்

    அபிராமம் காவல் நிலையத்தில் செய்யாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கமுதி வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் சரவணன், கமுதி காவல் நிலையத்தில் ராமமூர்த்தி, கடலாடியில் வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் காவல் நிலையங்களில் புகார் மனுக்களை அளித்தனர்

    இதையடுத்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் பாஜகவினரிடம் தெரிவித்துள்ளனர்.

    கணவன் இல்லாததால் மகனை வளர்க்க முடியாத தாய்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கிட்னி பாதிப்பால் பாதிக்கப்பட்டைந்த தாய்அவரது மகன் 42 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அவரை பராமரிக்க முடியாமல் கருணை கொலை செய்ய மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

    யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க மனு

    சிதம்பரம் நடராஜரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியார்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காசியிலிருந்து அகோரிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்த இருப்பதாக கூறினர்.

    தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய பெருந்தலை ஆமை

    தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகம் அருகே உள்ள மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில் 60 கிலோ எடை கொண்ட பெருந்தலை ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த ராமேஸ்வரம் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெருந்தலை ஆமையை மீட்டு கடற்கரை மணிலில் புதைத்தனர்.கரை ஒதுங்கிய பெருந்தலை ஆமை பெரிய கப்பலிப் பின் புறம் உள்ள இரும்பு விசிறிப்பட்டு காயமடைந்திருக்கலாம் அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இயற்கை வளம் பாதுகாப்பு தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம்
    இயற்கை மற்றும் கடல் வளம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேக்கரும்பு அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி தீனா

    தமிழ்நாடு முழுவதும் இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த கிளம்புகிறார். கடல் வளம் காக்கவும், மரம் வளர்ப்போம், இயற்கை காப்போம், பாலிதீன் ஒழிப்போம் என்ற நோக்கத்தோடு செல்லும் வழியில் எல்லாம் மரக்கன்றுகள் வைத்து செல்கிறார்.

    பள்ளிக்கு சென்ற சிறுவன் விபத்தில் காயம்

    ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் தெற்குத்தெருவை சேர்ந்தவர் நாகரெத்தினம் (35). இவரின் மகன் அபினேஷ் (7). ராமநாதபுரம் பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் முன்னால் அமர வைத்து சென்று கொண்டு இருந்தார். இது குறித்து நாகரெத்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தற்கொலை செய்து கொண்ட கண்டக்டர்

    முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் முனீஸ்வரன் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக இருந்துள்ளது.

    இந்தநிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானிலை அறிக்கை

    பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்

    காற்றின் வேகம்: 33 முதல் 55 கிமீ/ம வரை
    வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக உள்ளது

    காற்றின் திசை: தென்மேற்கு
    மழைக்கான வாய்ப்பு உண்டு.

    இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.

    ராமநாதபுரம்

    பெட்ரோல்–112.45, டீசல்– 102.19

    ராமேஸ்வரம்

    பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88

    பரமக்குடி

    பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41

    திருவாடானை

    பெட்ரோல்– 112.31, டீசல்–102.41

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி