ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் வழங்க கோரி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண் கடல் பாசி சேகரிக்க கடலுக்கு சென்ற போது வடமாநில இளைஞர்களால் கூட்டு பாலியல் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, மீனவ பெண்ணை படுகொலை செய்த குற்றவாளிகளை கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மீனவ பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ராமேஸ்வரம் தீவு பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக நீதி கேட்டு போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த போராட்டமானது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து மீனவர்கள் மீனவபெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.