ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி ராமருக்கு தீர்த்தவாரி உற்சவம் 

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி ராமருக்கு தீர்த்தவாரி உற்சவம் 

X
தீர்த்தவாரி

தீர்த்தவாரி உற்சவம்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தை அமாவாசயை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவமானது சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தை அமாவாசயை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற மற்றும் முக்கிய புண்ணிய ஸ்தலம் ராமேஸ்வரம் ஆகும். காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் ஆகிய முப்பெருமைகளை கொண்டது ராமேஸ்வரம். தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுத்து வழிபட்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

இந்நிலையில், பிற்பகல் 12 மணிக்கு திருக்கோவிலிலிருந்து தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி பர்வதவர்த்தனி அம்பாள், கருடவாகனத்தில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சனேயர், சுக்ரீவர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு அக்னி தீர்த்தம் கடற்கரையில் எழுந்தருளி குருக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராமருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

தை அமாவாசை திதி - ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

இதையடுத்து, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள் பாலித்து, குருக்கர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. பகல் முழுவதும் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு மாலை 5.30 மணியளவில் மண்டகப்படியில் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram