முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் ஒரே நேரத்தில் மூன்று கோயில்களில் கும்பாபிஷேகம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

பரமக்குடியில் ஒரே நேரத்தில் மூன்று கோயில்களில் கும்பாபிஷேகம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

X
ஒரே

ஒரே நேரத்தில் மூன்று கோவில் கும்பாபிஷேகம்

பரமக்குடியில் ஒரே நேரத்தில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆகிய மூன்று கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றன.

  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் ஒரே நேரத்தில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ 5 ஆஞ்சநேய சுவாமி ஆகிய மூன்று கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த காக்காதோப்பில் சௌராஷ்ட்ரா பிராமண மகா ஜனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ சுந்தர பால ஆஞ்சநேயசுவாமி மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன.

கோயில் கும்பாபிஷேகம்

இந்த கோயில்களில் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜையானது மார்ச் 24-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மகா சாந்தி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ சுந்தர பாலஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பக்தர்கள் தரிசனம்

top videos

    இதையடுத்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram