முகப்பு /ராமநாதபுரம் /

உணவுக்கு வழியில்லை.. தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 3 இலங்கை தமிழர்கள்..

உணவுக்கு வழியில்லை.. தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 3 இலங்கை தமிழர்கள்..

X
தனுஷ்கோடியில்

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 3 இலங்கை தமிழர்கள்

3 Sri Lankan Tamils ​​came to Dhanushkodi | இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இலங்கையில் இருந்து 3 பேர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரையில் 254 பேர் இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த கிங்ஸ்டன், இவரது மனைவி ரஞ்சினி, இவர்களது மகள் திபெத்தினி ஆகியோர் இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோயில் கடற்கரையில் வந்திறங்கி உள்ளனர்.

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த 3 இலங்கை தமிழர்கள்

இதையடுத்து, தகவலறிந்து அங்கு சென்ற மரைன் காவல்துறையினர் 3 பேரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து விட்டு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்க உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram