Home /ramanathapuram /

3 நாள் நடக்கும் மாநில ஹாக்கி போட்டி துவங்கியது.!

3 நாள் நடக்கும் மாநில ஹாக்கி போட்டி துவங்கியது.!

மூன்று நாட்கள் நடைபெறும்– மாநில அளவிலான ஹாக்கி போட்டி

மூன்று நாட்கள் நடைபெறும்– மாநில அளவிலான ஹாக்கி போட்டி

சர்வதேச ஹாக்கி மைதானத்தில் 16 அணிகள் கலந்து கொள்ளும் 3 நாட்கள் நடைபெறும் போட்டிகள் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் 16 அணிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் சிறப்பாக துவங்கியது. மூன்று நாட்களாக இப்போட்டி நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம் நகரில் 6ம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல் கலாம் மாநில அளவிளான விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் 16 அணிகள் கலந்து கொள்ளும் 3 நாட்கள் நடைபெறும் போட்டிகள் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து சுமார் 16 அணிகள் இன்று முதல் துவங்கி மூன்று நாட்கள் போட்டிகள் நடைபெறுகின்றன,

    மேலும்கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர்,

    இப்போட்டியில், சென்னை காவல்துறை அணி, மதுரை தென்மண்டல காவல்துறையினர் அணி,மதுரை ரிசர்வ் லைன் அணி, வாடிப்பட்டி, கோவில் பட்டி அணி, சிவகங்கை மாவட்ட அணி ஆகிய அணிகளுடன் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 20 ஆயிரம், 2-வது பரிசு 15,000 ஆயிரம், மூன்றாவது பரிசு 10,000 என பரிசுகள் வழங்கப்பட்டு கோப்பைகள் வழங்கப்படுகிறது.இப்போட்டியை ராமநாதபுரம் ஹாக்கி அணியின் ஒருங்கிணைப்பாளர் அருணகிரி மிக சிறப்பாக செய்திருந்தார்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி