ஹோம் /ராமநாதபுரம் /

மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் ராமநாதபுரத்தை வீழ்த்தி தூத்துக்குடி அணி சாம்பியன்..!

மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் ராமநாதபுரத்தை வீழ்த்தி தூத்துக்குடி அணி சாம்பியன்..!

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

state level hockey : ராமநாதபுரம் சீதக்காதி மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி சாம்பியன்சிப் லீக் போட்டி, ராமநாதபுரத்தை வீழ்த்தி தூத்துக்குடி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் சார்பாக 2021-22ம் ஆண்டுக்கான மாநில அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் விளையாட்டு போட்டி சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 2 நாட்களாக நடைபெற்றது‌. இப்போட்டியானது, சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் நடத்தப்பட்டது. இதில், முதல் இரு இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, அரியலூர், நாகை, மதுரை, தஞ்சை தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 அணிகள் மாநில போட்டியில் கலந்துகொண்டது.

இந்நிலையில், இறுதியாக நடைபெற்ற இறுதி போட்டியில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் அணிகள் மோதியதில், 7–1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி அபாரமாக வெற்றி பெற்றது. ராமநாதபுரம் அணி 2வது இடத்தை பெற்றது. இதில், வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறந்த வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது‌.

First published:

Tags: Local News, Ramanathapuram, Sports