Home /ramanathapuram /

Ramanathapuram : திருக்கை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?

Ramanathapuram : திருக்கை மீனில் இத்தனை மருத்துவ குணங்களா?

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - திருக்கை மீன்

Ramanathapuram District : மண்ணிற்குள் புதைந்து வாழக்கூடிய வகையான திருக்கை மீன்கள் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் சிக்கின. திருக்கை மீனில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து இத்தொகுப்பில் அறிவோம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் 5 வகையான திருக்கை மீன்கள் சிக்கி உள்ளன. திருக்கை மீன்கள் எதற்கு பயன்படுகிறது எங்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது இதன் மருத்துவ பலன்கள் என்ன என்பது பற்றி காண்போம்.

    திருக்கை மீன்கள் 500 -க்கும் மேற்பட்ட வகைப்படும் என்று உயிரியல் அறிஞர்கள் கூறியுள்ளனர், இவை தட்டு போன்ற உடலமைப்பும் நீண்ட வாலும் கொண்டதாக இருக்கும், மீன்களைப் போல இவற்றுக்குச் செதில்கள் இருப்பது கிடையாது. கடலின் ஆழத்தில் மண்ணுக்குள் புதையுண்டு வாழும். திருக்கைகள் பொதுவாக தன்னை வேட்டையாடுபவர்களிமிருந்து தற்காத்துக்கொள்ள அதன் வாலை பயன்படுத்தும்.

    திருக்கை மீன்


    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    திருக்கை மீனில் ஒமேகா–3 சத்து அதிக அளவில் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர்.

    திருக்கை மீனை இழுக்கும் மீனவர்கள்


    யானை திருக்கை, புள்ளி திருக்கை, மட்டி திருக்கை, சட்டிதலையன், பெருந்திருக்கை ஆகிய 5 வகை திருக்கை மீன்கள் தற்போது பாம்பன் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் 60 முதல் 80 கிலோ வரையிலும் எடை கொண்டவையாக இருந்தன.

    திருக்கை மீன்


    ஒரு கிலோவிற்கு 100 லிருந்து 150 ரூபாய் வரையிலும் செல்வதாக மீனவர்கள் கூறினர். மேலும் இது கருவாட்டுக்கு உகந்ததாக கேரளாவிற்கு அதிகளவு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது எனவும், பாலூட்டும் தாய்மார்கள் திருக்கை கருவாட்டினை சமைத்து சாப்பிட்டால் பால் ஊறும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்..

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Fish, Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி