முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்..

பரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்..

X
பரமக்குடி

பரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

Paramakudi Meenakshi Amman Temple | பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரைக்கு அடுத்தப்படியாக சித்திரை திருவிழாவானது 12 நாட்கள் விமர்சையாக நடைபெறும். இந்தாண்டுகான சித்திரை திருவிழாவானது கடந்த 23ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமியும் – அம்பாளும் அலங்காரங்கள் கோலத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும் பட்டு வேஷ்டி, பட்டு சேலைகள் அணிந்து விட்டு இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவமானது வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பரமக்குடி மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர், இதில் கலந்து கொண்ட திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிறை மாற்றிக்கொண்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram