ஹோம் /ராமநாதபுரம் /

கடலாடியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

கடலாடியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

கடலாடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கடலாடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Thevar Jayanthi | கமுதி அடுத்த கடலாடியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென் மாவட்ட  அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம், வெற்றி இலக்கு நோக்கி சீறி பாய்ந்து சென்ற காளைகள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அடுத்த கடலாடியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென் மாவட்ட அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்ற நிலையில், வெற்றி இலக்கு நோக்கி காளைகள்சீறி பாய்ந்து சென்றதை பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். 

கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு தென்மாவட்ட அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சின்ன மாடு, பெரிய மாடு, நடு மாடு உள்ளிட்ட மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

இப்போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 81மாட்டுவண்டிளுடன் பந்தயம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்றன, முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி பந்தயம் வீரர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் ஆடுகள் கிடாய்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பல்வேறு பகுதி மற்றும் அப்பகுதி கிராமமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சாலையில் இருபுறமும் நின்று ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Thevar Jayanthi