முகப்பு /ராமநாதபுரம் /

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் “எடப்பாடி ஐயா வாழ்க” கோஷம்.. அதிமுகவினருக்கு எதிராக திரண்ட மக்கள்

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் “எடப்பாடி ஐயா வாழ்க” கோஷம்.. அதிமுகவினருக்கு எதிராக திரண்ட மக்கள்

X
முத்துராமலிங்கத்

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம்

Devar Jayanthi | பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திடீரென எடப்பாடி ஆதரவாளர்கள் “ஐயா எடப்பாடி வாழ்க” என கோஷமிட்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kamuthi, India

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடப்பாடி ஆதரவாளர்கள்  “ஐயா எடப்பாடி வாழ்க” என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் 30ம் தேதி தேவரின் 115வது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திடீரென எடப்பாடி ஆதரவாளர்கள் “ஐயா எடப்பாடி வாழ்க” என கோஷமிட்டனர்.

இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த நபர், “தேவர் நினைவிடத்தில் எடப்பாடி யார் கோஷம் போடக்கூடாது” என்று கூறினார். இதனால் அவர்களுக்கு வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்பட்டது. இதனை கண்டு அங்கிருந்த போலீசார் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், ஏராளமானோர் சேர்ந்து ‘ முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எப்படி எடப்பாடியார் வாழ்க என கோஷம் எழுப்பலாம்’ என்று கேள்வி கேட்டதால் அங்கு சலசலப்பு நிலவியது.  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷமிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: ADMK, Devar Jayanthi, EPS, Ramanathapuram, RB Udayakumar