ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை... முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை... முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க

ராமநாதபுரத்தில் மின்தடை அறிவிப்பு

ராமநாதபுரத்தில் மின்தடை அறிவிப்பு

Ramanathapuram Power cut areas | ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி துணை மின்நிலையத்தில் நானை (நவம்பர் 5) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருவாடானை அருகே தொண்டி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

அதன்படி, நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொண்டி, நம்புதாளை, எம்.வி. பட்டி னம், சோளி யக்குடி, வி.எஸ். மடம், சம்பை, புதுப்பட்டினம், மணக்குடி, காரங்காடு, முள்ளிமுனை, புதுக்காடு, மைக்கேல் பட்டினம், கண்ணா ரேந்தல் ஆகிய பகுதிகளில் மின் விநியோம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்துடன் கடுக்களூா், கடம்பானேந்தல், எஸ்.பி. பட்டினம், எம்.ஆா். ஆா் பட்டினம், பி.வி. பட்டி னம், கொடிபங்கு, வட்டாணம், பாசிப்பட்டினம், தீா்த்தாண்டதானம், திருவெற்றியூா், அச்சங்குடி, விளத்தூா், கீழ்குடி, காடாங்குடி, குருமிளான்குடி, தளிா்மளிருங்கூா், கொட்டகுடி, பேரையூா், குளத்தூா் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என திருவாடானை மின் உதவி செயற்பொறியாளா் (முழு கூடுதல் பொறுப்பு) நிஷாக் ராஜா தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram