ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு... வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்.. 

ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு... வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்.. 

குழாய் உடைப்பால் கடலில் கலக்கும் குடிநீர்

குழாய் உடைப்பால் கடலில் கலக்கும் குடிநீர்

Ramanathapuram District News : பாம்பன் சாலை பாலத்தில் கடந்த நான்கு நாட்களாக காவேரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடலில் கலந்து வீணாகும் குடிதண்ணீர் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிசெய்ய கோரிக்கை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

காவிரி குடிநீரானது, பாம்பன் சாலை பாலத்தில் உள்ள நடைபாதை வழியாக பெரிய குழாய்கள் அமைத்து பாம்பன் தங்கச்சிமடம், இறுதியாக ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு குழாய் வழியாக குடிநீர் செல்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் என்பது வறட்சியான மாவட்டம் ஆகும். வறட்சியினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் இன்றி மக்கள் பெரும் துயரம் அடைந்து பத்து, பதினைந்து கிலோமீட்டர் சென்று தண்ணீர் பிடித்து குடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் உள்ள மீனவ மக்கள் மண்ணில் குழிதோண்டி அதில் கிடைக்கும் நீரையே அருந்தி வாழ்கின்றனர் நிலை தான் நிலவுகிறது.

குழாய் உடைப்பால் கடலில் கலக்கும் குடிநீர்

இதையும் படிங்க :  “இலங்கையில் வாழ வழியில்லை.. பைபர் படகுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து வந்தோம்..” தனுஷ்கோடிக்கு வந்த மேலும் 5 ஈழ தமிழர்கள் வேதனை

இப்படி ஒருபக்கம் இருக்க கடந்த நான்கு நாளுக்கு மேலாக மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு சாலை பாலத்தில் உள்ள பெரிய குழாய்கள் வழியாக காவிரி குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பாம்பன் கடலில் கலந்து வீணாகிறது.

அடிக்கடி பாம்பன் சாலை பாலத்தில் உள்ள குழாய்களின் உப்பு காற்று அரிப்பினால் உடைப்பு ஏற்பட்டு இவ்வாறு குடிநீர் கடலில் கலந்து வீணாகிறதால் அடிக்கடி தீவு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

குழாய் உடைப்பால் கடலில் கலக்கும் குடிநீர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை சரிசெய்ய பழைய குழாய்கள் அனைத்தையும் அகற்றி விட்டு புதிய குழாய்கள் அமைத்து, குடிதண்ணீர் வீணாவதையும், தட்டுப்பாடு ஏற்படுவதையும் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad